... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#பாலியல் குற்றச்சாட்டுகள் - ஐபிஎல் போட்டிகளிலிருந்து யாஷ் தயாள் விலகல்

வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சீசனில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார் யாஷ் தயாள். இந்தாண்டு அவர் இல்லாதது ஆர்பிசிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் தனிப்பட்ட காரணங்களுக்காக நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், அவர் ஆர்சிபி அணியுடனான ஒப்பந்தத்தில் நீடிப்பார் என்றும், அவருக்குப் பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் பெங்களூரு அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர், யாஷ் தயாள் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 5 ஆண்டுகளாகப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகப் புகார் அளித்தார். இதுதொடர்பாக அவர்மீது வழக்குப் பதிவு செயப்பட்டுள்ளது. இந்த வழக்கில் யாஷ் தயாளைக் கைது செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் ஜெய்ப்பூரில் மற்றொரு போக்சோ வழக்கும் யாஷ் தயாள் மீது பதியப்பட்டுள்ளது. இதில் ஜெய்ப்பூரில் உள்ள போக்சோ நீதிமன்றம் யாஷ் தயாளின் முன்ஜாமின் மனுவை நிராகரித்தது.

இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தொடர்வதால் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதனாலேயே இந்தாண்டுப் போட்டிகளில் இருந்து யாஷ் தயாள் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சீசனில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார் யாஷ் தயாள். இந்தாண்டு அவர் இல்லாதது ஆர்பிசிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

Source : Malaimalar

1 hour ago

Home Flash News