Select Location
All Locations
State
Region
City / District
சங்கரன்கோவில் ஆடித்தவசுத் திருவிழா: தென்காசி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை

சங்கரன்கோவில் ஆடித்தவசுத் திருவிழா: தென்காசி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை

சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தவசுத் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு தேர்வுகள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்றும் நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வேலைநாளாக பின்பற்றப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில், சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தவசுக் காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. காலை 8.30-க்கு சுவாமி, அம்பாள், சந்திரமௌலீஸ்வா், உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பிற்பகல் 12 மணியளவில் கோயிலில் இருந்து கோமதி அம்பாள் மண்டகப்படிக்கு எழுந்தருளுகிறாா். மாலை 6.05 மணியளவில் சுவாமி சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சிக் கொடுக்கும் ஆடித்தவசுக் காட்சி நடைபெறும். இரவு 11 மணிக்கு சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்க சுவாமியாக அம்பாளுக்கு காட்சி கொடுக்கிறாா். தவசு காட்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தா்கள் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.


Dinamani 30 days ago
Home Flash News