Select Location
All Locations
State
Region
City / District
தரைமட்டமாக்கப்பட்ட போதைப்பொருள் விற்பனையாளர்களின் வீடுகள்..

தரைமட்டமாக்கப்பட்ட போதைப்பொருள் விற்பனையாளர்களின் வீடுகள்..

ஜம்மு: போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நபர்களுடன் தொடர்புடைய சொத்துக்கள் மீதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஜம்மு நகரின் புறநகர் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரின் குடியிருப்புச் சொத்துக்களை மாவட்ட நிர்வாகம் இடித்து தரைமட்டமாக்கி உள்ளது.

மீரன் சாஹிபின் இந்திரா நகர் காலனிக்குள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர்கள் நுழைந்து, அப்பகுதியில் இருந்த இரண்டு போதைப்பொருள் விற்பனையாளர்களின் வீடுகளை இடித்து தள்ளியதாக அங்கிருந்து வந்த தகவல்கள் கூறியுள்ளன. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வீடுகளை சேர்ந்த இருவர் மீது NDPS கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை, 'போதைப்பொருள் இல்லாத ஜம்மு காஷ்மீர் நடவடிக்கை'யின் கீழ் எடுக்கப்பட்டது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.


Dinakaran 1 hour ago
Home Flash News