ரசிகர்கள் ஷாக்..! கேம் ஆஃப் த்ரோன்ஸ்' புகழ் நடிகர் மைக்கேல் பேட்ரிக் காலமானார்
பிரபல ஹாலிவுட் தொடரான 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' மற்றும் 'ப்ளூ லைட்ஸ்' போன்ற புகழ்பெற்ற தொடர்கள் மூலம் உலகெங்கும் ரசிகர்களை கவர்ந்த ஹாலிவுட் நடிகர் மைக்கேல் பேட்ரிக், தனது 35-வது வயதில் காலமானார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக மூளை மற்றும் முதுகுத் தண்டில் உள்ள தசைகளை இயக்கும் நரம்பு செல்கள் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்தார்
இந்நிலையில், அவர் உடல்நிலை மோசமானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி , நேற்று உயிரிழந்ததாக அவர் உறவினர்கள் தெரிவித்தனர்.இவரது மறைவு இந்திய ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.