... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#புதுச்சேரியில் தொகுதிப் பங்கீட்டுக்கு முன்பே வேட்புமனு தாக்கலை தொடங்கிய திமுக!

புதுச்சேரியில் தொகுதிப் பங்கீட்டுக்கு முன்பே வேட்புமனு தாக்கலை தொடங்கிய திமுக!

புதுச்சேரி: புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பாகவே திமுகவினர் வேட்புமனு தாக்கலை தொடங்கியுள்ளனர். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் தொடங்கப்பட்டுள்ளது. மார்ச் 23-ம் தேதி கடைசி நாளாகும். தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி தொகுதிப் பங்கீடும் முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சகன், காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதிப் பங்கீடு முடிவாகவில்லை. தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

மேலும், திமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள் அனைத்திலும் வேட்புமனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும், கூட்டணி உடன்பாடு எட்டப்பட்ட பிறகு, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் தலைமையிலான குழுவினர் கட்சியின் மேலிடத்துடன் ஆலோசனை நடத்த வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி விரைந்துள்ளனர். இந்நிலையில், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. தொகுதிகளும் இறுதியாகாத நிலையில, திமுகவினர் கட்சியின் அறிவுறுத்தலின்பேரில் வேட்பு மனு தாக்கலைத் தொடங்கியுள்ளனர். அதன்படி புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிட திமுக எம்எல்ஏவாக இருக்கும் சம்பத், மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். சாரம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனு தாக்கலை சம்பத் தாக்கல் செய்தார்.

 இது குறித்து சம்பத் எம்எல்ஏவிடம் கேட்டபோது, “வேட்பு மனு தாக்கல் செய்ய நாட்கள் குறைவாக உள்ளது. மேலும் இன்று நல்ல நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம். தொகுதி பங்கீடு மற்றும் தொகுதி இறுதியாகும் பட்சத்தில் தலமை என்ன சொல்கிறதோ, அதனை கேட்டு நடப்போம். முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிட தலைமை எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை” என்றார்.

Source : Hindu Tamil

2 hours ago

Home Flash News