போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: புதினுடன் பிரதமர் மோடி பேச்சு
உக்ரைன் - ரஷியா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உடனான பேச்சுவார்த்தையில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக உஸ்பெகிஸ்தான் நாட்டிற்குச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து இன்று கிர்கிஸ்தான் நாட்டிற்குச் சென்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகருக்குச் சென்ற அவர்க்கு இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிஷ்கெக் நகரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது விளாதிமீர் புதினுடன் பிரதமர் மோடி பேசியதாவது:
''உக்ரைன் விவகாரம் குறித்து நாம் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். நாம் முன்பு சந்தித்தபோது, இவ்விவகாரத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் நீங்கள் எனக்கு விரிவாக விளக்கம் அளித்தீர்கள். அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது. தொடர்ந்து ஆதரிக்கும். போரில் கழியும் ஒவ்வொரு நாளும் மனிதகுலத்தைப் பின்னோக்கி இழுக்கிறது. ஆனால், அமைதியை நோக்கிய ஒவ்வொரு நடவடிக்கையும் மனிதகுலத்திற்குப் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. முடிவில்லாத போரிலிருந்து விலகி, போரை முடிவுக்குக் கொண்டுவரும் திசையில் நாம் நகர வேண்டும். மனிதகுலத்தின் நலனுக்கு இது அவசியம்.