Select Location
All Locations
State
Region
City / District
தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு!

தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு!

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி உள்பட 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று(செப். 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஆண்டுக்கு இரு முறை கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். வாகனங்களுக்கு ஏற்ப ஒரு வழிப் பயணம் மற்றும் மாதாந்திரக் கட்டணம் ரூ. 5 முதல் ரூ. 735 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, செங்குறிச்சி, வாலாஜாபாத், சமயபுரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் வாகன வகையைப் பொறுத்து ரூ. 5 முதல் ரூ. 20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. லாரிக்கு ரூ. 380 சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், ரூ. 20 வரை உயர்த்தப்பட்டு ரூ. 400 ஆக வசூலிக்கப்படுகிறது. பேருந்துக்கு சுங்கக் கட்டணம் ரூ. 240-லிருந்து ரூ. 250-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒருமுறை பயணிக்கும் லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு தற்போது வசூல் செய்யப்படும் கட்டணத்தில் இருந்து ரூ. 10, ஒரே நாளில் பலமுறை பயணிக்கும் லாரி, பேருந்துகளுக்கு தற்போது வசூல் செய்யப்படும் கட்டணத்தில் இருந்து ரூ. 15 உயர்த்தி வசூல் செய்யப்படுகிறது


Dinamani 1 hour ago
Home Flash News