Select Location
All Locations
State
Region
City / District
ஆசிய விளையாட்டு போட்டி: வீரர்கள் தங்குமிட வசதியில் அதிருப்தி - இந்தியா, பாக். கிரிக்கெட் வாரியங்கள் கவலை

ஆசிய விளையாட்டு போட்டி: வீரர்கள் தங்குமிட வசதியில் அதிருப்தி - இந்தியா, பாக். கிரிக்கெட் வாரியங்கள் கவலை

நகோயா: ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளுக்​கான உள்​கட்​டமைப்பு மற்​றும் தங்​குமிட வசதி​கள் குறித்து இந்​தி​யா, பாகிஸ்​தான் உள்​ளிட்ட தெற்​காசிய நாடு​களின் கிரிக்​கெட் வாரி​யங்​கள் கடும் கவலை​யும் அதிருப்​தி​யும் தெரி​வித்​துள்​ளன.

ஜப்​பானின் ஐச்​சி-நகோயா நகரில் வரும் செப்​டம்​பர் 19 முதல் ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகள் நடை​பெறவுள்​ளன. ஆசிய விளை​யாட்​டுப் போட்​டி​யில் கிரிக்​கெட் போட்​டி​யும் இடம்​பெற்​றுள்​ளது. இதில் மகளிருக்​கான தொடர் செப்​டம்​பர் 17 முதல் 22 வரை​யிலும், ஆடவருக்​கான தொடர் செப்​டம்​பர் 24 முதல் அக்​டோபர் 3 வரை​யிலும் நடை​பெறவுள்​ளன.

இந்​நிலை​யில் இந்த தொடரில் பங்​கேற்​கும் கிரிக்​கெட் அணி​களுக்​கான தங்​குமிடம் மற்​றும் கிரிக்​கெட் மைதான வசதி​கள் திருப்​தி​கர​மாக இல்லை என இந்​தி​யா, பாகிஸ்​தான், இலங்​கை, வங்​கதேசம் மற்​றும் ஆப்​கானிஸ்​தான் ஆகிய நாடு​களின் கிரிக்​கெட் வாரி​யங்​கள் அதிருப்தி தெரி​வித்​துள்​ளன.

போட்​டிகள் நடை​பெறவுள்ள கொரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானம், பேஸ்​பால் மைதானத்​தில் இருந்து தற்​காலிக​மாகக் கிரிக்​கெட் மைதான​மாக மாற்​றப்​பட்டு வரு​கிறது. இங்கு வீரர்​களுக்​கான உடை மாற்​றும் அறை​கள் கூடாரங்​களில் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், கழிப்​பறை​கள் சுமார் 500 மீட்​டர் தொலை​வில் அமைந்​துள்​ள​தாக​வும் கூறப்​படு​கிறது. மேலும், புதி​தாக அமைக்​கப்​பட்ட ஆடு​களங்​கள் போது​மான அளவு சோதிக்​கப்​பட​வில்லை என்ற குற்​றச்​​சாட்​டும் எழுந்​துள்​ளது.

இந்த வசதி​களை நேரில் ஆய்வு செய்ய ஆசிய கிரிக்​கெட் கவுன்​சில் பிர​தி​நி​தி​களை அனுப்ப உள்​ளது. இதனிடையே, வசதி​கள் மேம்​படுத்​தப்​ப​டா​விட்​டால் ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிக்கு இரண்​டாம் தர அணியை அனுப்​புவது குறித்து இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம் பரிசீலித்து வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது


Hindu Tamil 55 minutes ago
Home Flash News