Select Location
All Locations
State
Region
City / District
1958 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பீலே அணிந்த ஜெர்சி ரூ.47 கோடிக்கு ஏலம்

1958 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பீலே அணிந்த ஜெர்சி ரூ.47 கோடிக்கு ஏலம்

நியூயார்க்: 1958 உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரேசில் அணி​யின் ஜாம்​ப​வான் பீலே அணிந்து விளை​யாடிய ஜெர்சி 49 லட்​சம் டாலருக்​கு (இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.47.18 கோடி) ஏலத்​தில் விற்​பனை செய்​யப்​பட்​டது. 1958-ம் ஆண்டு நடை​பெற்ற உலகக் கோப்பை கால்​பந்து இறு​திப் போட்​டி​யில் பிரேசிலும், ஸ்வீட​னும் விளை​யாடின. இதில் பிரேசில் 5-2 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று கோப்​பையைக் கைப்பற்​றியது. இந்த இறு​திப் போட்​டி​யின்​போது ஜாம்​ப​வான் பீலே, 2 கோல்​களை அடித்து அணிக்கு வெற்​றித் தேடித் தந்​தார்.

இந்​நிலை​யில் உலகக் கோப்பை இறு​திப் போட்​டி​யின்​போது அவர் அணிந்து விளை​யாடிய ஜெர்ஸி நேற்று முன்​தினம் ஏலத்​தில் விடப்பட்​டது. ஏலத்​தில் அது இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.47.18 கோடிக்கு எடுக்​கப்​பட்​ட​தாக ஏல நிறு​வன​மான சோத்பி தெரிவித்துள்​ளது. கால்​பந்து வீரர் ஒரு​வரின் ஜெர்ஸி 2-வது அதிகபட்ச விலைக்கு ஏலத்​தில் எடுக்​கப்​பட்​டுள்​ளது. இதற்கு முன்பு அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி​யின் ஜாம்​ப​வான் டியூகோ மாரடோ​னா​வின் ஜெர்ஸி கடந்த 2022-ல் 93 லட்​சம் அமெரிக்க டாலருக்கு ஏலத்​தில் விற்​பனை செய்​யப்​பட்​டது. 1958-ம் ஆண்​டில் தான் அணிந்து விளை​யாடிய ஜெர்​ஸியை பீலே, தனது நண்​பரும், ஒரே அறை​யில் வசித்​தவரு​மான டிடாவுக்கு அன்பளிப்பாக கொடுத்​திருந்​தார். அந்த ஜெர்​ஸியை, டிடா குடும்​பத்​தார் பிரேசில் மியூசி​யத்​துக்கு வழங்​கினர். அது​தான்​ தற்​போது ஏலத்தில்​ விடப்​பட்​டது.


Hindu Tamil 1 hour ago
Home Flash News