Select Location
All Locations
State
Region
City / District
நடிகை பிரெண்டா ஃப்ரிக்கர் காலமானார்..!!

நடிகை பிரெண்டா ஃப்ரிக்கர் காலமானார்..!!

நடிகை பிரெண்டா ஃப்ரிக்கர் , தனது 81-ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். 'மை லெஃப்ட் ஃபுட்', 'ஹோம் அலோன் 2: லாஸ்ட் இன் நியூயார்க்' மற்றும் பிபிசியின் புகழ்பெற்ற 'கேஷுவாலிட்டி' டிவி தொடர் ஆகியவற்றின் மூலம் உலகளவில் அறியப்பட்ட புகழ்பெற்ற அயர்லாந்து நடிகை பிரெண்டா ஃபிரிக்கர் உடல்நலக்குறைவால் காலமானார்.

கடந்த 1989-ஆம் ஆண்டு வெளியான 'மை லெஃப்ட் ஃபுட்' திரைப்படத்தில், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகனைப் போராடி வளர்க்கும் தாயின் கதாபாத்திரத்தில் பிரெண்டா ஃப்ரிக்கர் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்தத் திரைப்படத்தின் சிறந்த நடிப்பிற்காக, இவருக்குச் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம், ஆஸ்கர் விருதினை வென்ற முதல் அயர்லாந்து நாட்டு நடிகை என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார். பிரெண்டா ஃபிரிக்கரின் மறைவை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய பிரெண்டா, 1977-ல் 'கொரோனேஷன் ஸ்ட்ரீட்' மற்றும் 1978-ல் டேவிட் ஹேரின் 'லிக் கிங் ஹிட்லர்' ஆகியவற்றில் நடித்து கவனம் பெற்றார். தொடர்ந்து 1986-ஆம் ஆண்டு பிபிசியின் டிவி தொடரான 'கேஷுவாலிட்டி'-யின் முதல் எபிசோடில் செவிலியர் மேகன் ரோச்சாக அறிமுகமாகி, 2010 வரை அதில் அவ்வப்போது தோன்றி ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரமாக மாறினார்.மேலும், 1992-ல் வெளியான 'ஹோம் அலோன் 2' திரைப்படத்தில் மெக்காலே கல்கினுடன் இணைந்து அவர் நடித்த Pigeon Lady கதாபாத்திரம், இன்று வரை மறக்க முடியாததாக திகழ்கிறது. கடந்த சில காலமாகவே வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த பிரெண்டா ஃப்ரிக்கர், சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.


Smacy News 1 hour ago
Home Flash News