Select Location
All Locations
State
Region
City / District
அளவிட முடியாத மகிழ்ச்சி... முதல்வர் விஜய்யைச் சந்தித்த சமந்தா!

அளவிட முடியாத மகிழ்ச்சி... முதல்வர் விஜய்யைச் சந்தித்த சமந்தா!

நடிகை சமந்தா முதல்வர் விஜய்யைச் சந்தித்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். நடிகை சமந்தா நடிப்பில் உருவான மா இண்டி பங்காரம் திரைப்படம் நாளை (ஜூன் 19) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் தமிழ் வடிவத்திற்கு, எங்கள் தங்கம் எனப் பெயரிட்டுள்ளனர்.

இதற்கான புரமோஷனில் கலந்துகொள்ள சென்னை வந்த நடிகை சமந்தா தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சென்று சந்தித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “இன்று சென்னை வந்த தருணத்தில் அளவிட முடியாத மகிழ்ச்சியை உணர்ந்தேன். நம் முதலமைச்சரை சந்திக்கப் போகிறேன் என்ற எண்ணமே அந்த உணர்வுக்குக் காரணம். விஜய் சார் திரையில் மட்டும் ஒரு நாயகனாக இருக்க வேண்டியவர் அல்ல. அவருடைய ஆற்றல், இருப்பு, மக்களிடம் அவர் ஏற்படுத்தும் தாக்கம் ஆகிய அனைத்தும் அவர் இன்னும் பெரிய ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவர் போலத் தோன்றியது.

முற்றிலும் புதிய ஒரு களத்தில் காலடி எடுக்கத் தேவையான அந்த தைரியமே என்னை அதிகம் ஊக்குவிக்கிறது. ஏற்கனவே உச்சத்தை அடைந்த ஒரு துறையை விட்டு, இன்னும் பெரிய பொறுப்பும் சவால்களும் நிறைந்த பாதையைத் தேர்வு செய்வது, எளிதாக இருப்பதற்காக அல்ல; மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையால். நம்மைத் தாண்டி சமூகத்திற்கு என்ன பங்களிக்க முடியும் என்று சிந்திக்கிறோம். ஆனால், உண்மையில் அந்த அழைப்புக்கு பதிலளிப்பவர்கள் மிகவும் சிலரே. விஜய் சார், ஏற்கனவே அவரை நம்புகிறவர்களையே கூட ஆச்சரியப்படுத்துவார் என்ற உணர்வு எனக்கு இருக்கிறது. அவர் வகிக்கும் பதவியால் அல்ல, அதனை அணுகும் அவரது நோக்கத்தாலும் மனப்பாங்காலும். அவர் தேர்ந்தெடுத்த பாதையில் உறுதியாக முன்னேற தேவையான தைரியம் கிடைக்க வாழ்த்துகிறேன். இதைப் பார்க்கும் இளைஞர்களே, நீங்கள் முதலில் கண்ட கனவை விட வாழ்க்கை இன்னும் பெரியதாக இருக்கலாம் என்பதற்கான ஒரு நினைவூட்டலாக இது இருக்கட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.


Dinamani 2 hours ago
Home Flash News