Select Location
All Locations
State
Region
City / District
பயிர்க்கடன் தள்ளுபடி கோரி அதிமுக சார்பில் விழுப்புரத்தில் 16-ல் ஆர்ப்பாட்டம்: பழனிசாமி அறிவிப்பு

பயிர்க்கடன் தள்ளுபடி கோரி அதிமுக சார்பில் விழுப்புரத்தில் 16-ல் ஆர்ப்பாட்டம்: பழனிசாமி அறிவிப்பு

சென்னை: தவெக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில் விழுப்புரத்தில் ஜூன் 19-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தேர்தல் அறிக்கையில் கூறியபடி, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றவும், தமிழகத்தில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யவும் தவெக அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் ஜூன் 19-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதன்படி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் இரா.பசுபதி தலைமை தாங்குகிறார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News