Select Location
All Locations
State
Region
City / District
மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனு நிராகரிப்பு - மீனாட்சி நடராஜன் உச்சநீதிமன்றத்தில் மனு - நாளை விசாரணை

மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனு நிராகரிப்பு - மீனாட்சி நடராஜன் உச்சநீதிமன்றத்தில் மனு - நாளை விசாரணை

மத்திய பிரதேசத்தில் தமிழ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் மீனாட்சி நடராஜன். இளம் வயது முதல் காங்கிரசில் இருந்து வரும் இவர் அக்கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். 2009 முதல் 2014 வரை மத்திய பிரதேசத்தின் மண்டசௌர் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

24 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 18 நடக்க உள்ள நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் மீனாட்சி நடராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

நிராகரிப்பு

ஆனால் தெலுங்கானாவில் அவர் மீதிருந்த புகாரை தனது வேட்பு மனுவில் தாக்கல் செய்யவில்லை என பாஜக வேட்பாளர் சுட்டிக்காட்டியதை அடுத்து மீனாட்சியின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதை எதிர்த்து மீனாட்சி நடராஜன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

மனு

இந்த மனுவை நாளை (ஜூன் 12) விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம், தேர்தல் ஆயத்தங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது. இன்று வாதத்தின்போது நீதிமன்றத்தில் மீனாட்சியின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "தெலங்கானாவில் ஒரு தனிப்பட்ட புகார் தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டது. அந்த வழக்கை நீதிமன்றம் இன்னும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே அதை வேட்புமனுவில் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை" கூறியது குற்பிப்பிடத்தக்கது.


Malaimalar 1 hour ago
Home Flash News