மீண்டும் மூண்டது போர்... ஹார்முஸ் ஜலசந்தியை மறுபடியும் மூடியது ஈரான்..
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய போதும், பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்து வந்தார். இதனால், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் நேரடி போர் துவங்கியுள்ளது. இதனால், போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
ஜோர்டான், குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படைத் தளத்தை நோக்கி ஈரான் ராணுவம், டிரோன் தாக்குதல்களை நடத்தியது. இதனால், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடைய, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்பட 22 நாடுகள் தாக்குதலை நிறுத்துமாறு ஈரானுக்கு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. எந்தக் கப்பலும் செல்ல அனுமதி கிடையாது என்றும், தடையை மீறி ஜலசந்தியை கடக்க முயற்சிக்கும் கப்பல்கள் இலக்கு வைத்து தாக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.