இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் பக்ரித் வாழ்த்துகள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
சென்னை: இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் பக்ரித் வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். என்றென்றும் என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரியோராகத் திகழும் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துக்கள். நபிகள் நாயகம் வழங்கிய அறிவுரைகளை கடைபிடித்து வாழும் இஸ்லாமியர்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிலைபெறட்டும். இஸ்லாமிய சமூகத்துக்கும் திமுகவுக்கும் இடையேயான உறவு மேன்மையையும் உண்மையான பிணைப்பையும் கொண்டது. திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாமிய உரிமைகளுக்காக தோளோடு தோள் நிற்போம் என தெரிவித்தார்.