Select Location
All Locations
State
Region
City / District
4 கார்கள் ஏலம் விடுவதற்கான பொது அறிவிப்பு வெளியீடு

சென்னை ரயில்வே போலீசார் பயன்படுத்தி கழிவு செய்யப்பட்ட 4 கார்கள் ஏலம் விடுவதற்கான பொது அறிவிப்பு வெளியீடு

சென்னை: சென்னை ரயில்வே போலீசார் பயன்படுத்தி கழிவு செய்யப்பட்ட 4 கார்கள் ஏலம் விடுவதற்கான பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது; சென்னை இருப்புப்பாதை காவல் அலுவலத்தில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 05 நான்கு சக்கர வாகனங்கள் எதிர்வரும் 09.06.2026-ம் தேதி அன்று காலை 11.30 மணிக்கு எண்.8, வரதராஜலு தெரு, எழும்பூர் சென்னை-08 ல் அமைந்துள்ள சென்னை இருப்புப்பாதை காவல் அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஏலம் எடுக்க விரும்புவோர் 01.06.2026-ம் தேதி முதல் 05.06.2026-ம் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாகனங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவர். சென்னை இருப்புப்பாதை காவல் அலுவலக வளாகத்தில் ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 05.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் முன் பணமாக ரூ.1000/- செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் முடிந்தவுடன் முன்பணம் ரூ.1000/- உரியவருக்கு திருப்பித் தரப்படும்.
முன்பணத் தொகை செலுத்தும் நபர் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) முழுவதையும் ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். முகவரியுடன் கூடிய புகைப்பட அட்டை (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம்) நகலை ஏலத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Dinakaran 48 minutes ago
Home Flash News