கேரள மாநிலம் திருச்சூரில் ஏற்பட்ட பட்டாசு விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.14 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்த நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.14 லட்சம் நிவாரண வழங்க கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் கோயிலில் வரும் 26ஆம் தேதி நடைபெறுகின்றன திருச்சூர் பூரத்திற்காக பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்றபோது நேற்று திடீரென தீ விபத்து நிகழ்ந்தது.
அந்த வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தார்கள், ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 70%க்கு மேல் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு எர்ணாகுளம் திருச்சூர் பாலக்காடு சேர்ந்த சிறப்பு மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்று காலையில் கேரள அமைச்சரவை கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் கூடியது.
தலைமை செயலகத்தில் சிறப்பு முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதாவது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.14 லட்சம் நிவாரணம் வழங்கவும், அதைப்போன்று விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும் கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளன. அதுமட்டுமில்லாமல் காயமடைந்தவர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விபத்து குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சூர் பட்டாசு விபத்தை மாநில பேரிடராக அறிவிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.