'ஸ்டாலினை மோடியால் கட்டுப்படுத்தவே முடியாது...' ராகுல் காந்தி கொடுத்த நாக்அவுட் பஞ்ச்
Rahul Gandhi Speech Latest News Updates: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் வரும் ஏப். 21ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவருமான ராகுல் காந்தி இன்றுதான் (ஏப்ரல் 18) முதல்முறையாக பரப்புரை மேற்கொள்கிறார்.
ராகுல் காந்தியன் இன்றைய பரப்புரை டெல்லியில் இருந்து சென்னை வந்த ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு சென்று பரப்புரை செய்தார். அங்கிருந்து ராணிப்பேட்டை மாவ்டடம் சோளிங்கரில் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து திருச்சி மாவட்டம் துறையூரில் பிரச்சாரம் செய்ய உள்ளார். ராகுல் காந்தி இன்றுதான் முதல்முறை தமிழக தேர்தல் பரப்புரைக்கு வருகிறார் என்றாலும், இன்றும் கூட முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உடன் கூட்டு பரப்புரையில் ஈடுபடவில்லை. அடுத்து ராகுல் காந்தி வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) அன்றும் தமிழகத்திற்கு பயணம் செய்ய உள்ளார். சதித்திட்டம் முறியடிப்பு திருவள்ளூரில் பரப்புரை மேற்கொண்டபோது ராகுல் காந்தி, "பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைத்து தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பாஜக சதித்திட்டம் தீட்டியது. அதை நாம் போராடி முறியடித்தோம். தமிழ்நாட்டு மக்களின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அன்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும் என் குடும்பம் தமிழ்நாட்டில் இருந்து வராவிட்டாலும் தமிழ் மண்ணை சேர்ந்தவனாகவே உணர்கிறேன். தமிழர்கள் யார் என்பதை பாஜக சரியாக புரிந்துகொள்ளவில்லை.
எல்லா மாநிலங்களும் அடங்கியது இந்தியா தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றி அமைக்க நினைக்கிறார்கள். தமிழகத்தையும், வடகிழக்கு மாநிலத்தையும் ஒடுக்க பார்க்கிறார்கள். நரேந்திர மோடி ஏற்கெனவே சட்டத்தை ஒடுக்கி விட்டார். எல்லா மாநிலங்களும் அடங்கியது இந்தியா. எல்லா மாநிலங்களுக்கும் குரல் கொடுக்கும் உரிமை உள்ளது. எல்லா மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநில வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தின் அடையாளத்தை அழிக்க நினைக்கிறது பாஜக. பாஜக பிரதமர் ஒரு நாடு, ஒரு தேர்தல், ஒரு மொழி என்கிறார். ஆனால் இந்தியா அப்படி இல்லை. பல மொழிகளை சார்ந்தது இந்தியா. மொழிகளால் பிணைக்கப்பட்டது இந்தியா. தமிழ் சாதாரண மொழி அல்ல. தமிழ் மொழியை நேசிக்க காரணம் தமிழ்நாட்டிற்கு தாய் ஆகும். தமிழ் மொழியை தாக்க பிரதமருக்கு எவ்வளவு தைரியம் வேண்டும்... உண்மையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை" என்றார்.