Select Location
All Locations
State
Region
City / District
டி20 போட்டியில் இந்தியாவிற்காக அதிக ரன்: ரோகித் சாதனையை தகர்த்த மந்தனா

டி20 போட்டியில் இந்தியாவிற்காக அதிக ரன்: ரோகித் சாதனையை தகர்த்த மந்தனா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது, இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், ஸ்மிருதி மந்தனா ஒரு ரன் எடுத்தபோது இந்திய ஆடவர் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் வாழ்நாள் டி20 சாதனையான 4,231 ரன்களைக் கடந்தார்.

இதன்மூலம் இந்தியாவிற்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த முதன்மை வீரராக உருவெடுத்தார். ஸ்மிருதி மந்தனா டி20 போட்டிகளில் 4244 ரன்கள் குவித்துள்ளார்.


Malaimalar 1 hour ago
Home Flash News