... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#ஓட்டுப்போட உங்கள் நிறுவனம் வாய்ப்பு வழங்காவிட்டால், புகார் தெரிவிக்கலாம்.

ஓட்டுப்போட உங்கள் நிறுவனம் வாய்ப்பு வழங்காவிட்டால், புகார் தெரிவிக்கலாம்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வசதியாக அனைத்து தொழில்நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கட்டுமான நிறுவனங்கள் ஆகியன தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும்.ஒருவேளை விடுமுறை வழங்காவிட்டால், நிறுவனங்கள் மீது தொழிலாளர் சட்டத்தின்படி, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து புகார் அளிக்க தொழிலாளர்துறை சார்பில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவை : விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர்கள் 0422-2241136, 82206 13777, 95008 97708, 98433 71977 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

சென்னை மண்டலத்திற்கு 1800-425-7012 என்ற கட்டணமில்லா எண்ணிலும், அந்தந்த மாவட்ட தொழிலாளர் துறை கட்டுப்பாட்டு அறைகளிலும் புகார் அளிக்கலாம். ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளுக்கு பொதுப் பார்வையாளர் தேம்ஜென்வாபாங் ஆவோவிடம், 89258 15411 எண்ணில் புகாரளிக்கலாம், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகளுக்கு விக்ரம் குமார் - 89258 15413, திரு.வி.க.நகர், எழும்பூர் தொகுதிகளுக்கு ஜி.ஸ். சஹோடா - 89258 15415, ராயபுரம், துறைமுகம் தொகுதிகளுக்கு எஸ்.எல்.நவீன் - 89258 15417, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு தொகுதிகளுக்கு சுதிர் பாரா - 89258 15419, அண்ணாநகர், விருகம்பாக்கம் தொகுதிகளுக்கு ரஞ்சித் குமார் சிங் - 89258 15421, சைதாப்பேட்டை, தியாகராய நகர் தொகுதிகளுக்கு நான்சி சஹாய் - 89258 15423, மயிலாப்பூர், வேளச்சேரி தொகுதிகளுக்கு 89258 15425 ஆகிய எண்களில் மக்கள் புகார் அளிக்கலாம்.

திருப்பூர் : தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து, புகார் செய்யலாம். உதவி கமிஷனர் காயத்திரி 94430 21877, துணை ஆய்வாளர் பேச்சிமுத்து 99442 58037, உடுமலை முத்திரை ஆய்வாளர் சதீஷ்கண்ணன்– 99521 42578 என்ற எண்களில் புகார் அளிக்கலாம். தேர்தல் நாளில் விடுப்பு அளிக் காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விருதுநகர் மற்றும் சிவகாசி, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் திரு. இரா. இரவிச்சந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வாக்களிக்க ஏதுவாக விடுமுறை: விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்துத் தொழிற்சாலைகள், கட்டுமானப் பணியிடங்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், தேர்தல் நாளன்று தங்குதடையின்றி வாக்களிக்க ஏதுவாக, 23.04.2026 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும். நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தல்: அனைத்துத் தொழிற்சாலை உரிமையாளர்களும், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவரும் தேர்தல் நாளன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, விடுமுறை அளிக்கத் தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புகார் தெரிவிக்கக் கட்டுப்பாட்டு அறை: தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் குறித்துப் புகார் தெரிவிக்க விரும்புவோர், மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட கட்டுப்பாட்டு அறை எண்களைத் தொடர்பு கொள்ளலாம்: தொலைபேசி எண்கள்: 04562-294067, 04562-294068, 04562-294069 கட்டணமில்லாத் தொலைபேசி எண் (Toll Free): 1800 425 2166 ஜனநாயகக் கடமையை நிறைவேற்றத் தொழிலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவது ஒவ்வொரு நிறுவனத்தின் கடமையாகும் என இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Source : Smacy News

2 hours ago

Home Flash News