கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு - எடப்பாடி பழனிசாமி
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: * போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. * திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் மூதாட்டிகள் வரை பெண்களுக்கு பாதுகாப்பில்லை. * இரண்டரை வயது குழந்தையை கூட விட்டுவைக்கவில்லை, போதைப்பொருள் புழக்கத்தால் குற்றங்கள் அதிகரித்துள்ளது.
* தொலைக்காட்சிகளில் தங்கம், வெள்ளி நிலவரம் சொல்வதைப்போல் இன்றைய கொலை நிலவரம் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
* ஊழல் செய்வதில் தமிழ்நாடு முதல் மாநிலம், கடன் வாங்குவதில் திமுக சாதனை, ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர்.
* திமுக ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்டவை உயர்ந்துள்ளது.
* கொரோனா காலத்தில் வருமானம் இல்லாதபோதும் சிறப்பாக ஆட்சி செய்தோம்.
* திமுக ஆட்சியில் பல இடங்களில் அம்மா உணவகங்களை மூடி விட்டனர்.
* அம்மா உணவகங்களில் தரமற்ற உணவினை கொடுத்து தவறான பெயரை ஏற்படுத்த பார்க்கின்றனர்.
* அதிமுக ஆட்சி அமைந்த உடன் எனது நேரடி கட்டுப்பாட்டில் அம்மா உணவகங்கள் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.