Select Location
All Locations
State
Region
City / District
#அரை மாரத்தான் - மனித வடிவ ரோபோக்கள் தீவிரம்

அரை மாரத்தான் - மனித வடிவ ரோபோக்கள் தீவிரம்

சீனாவில் நடைபெறவுள்ள அரை மாரத்தான் போட்டிக்கான முன்பயிற்சியில் மனித வடிவ ரோபோக்கள் பங்கேற்றன. சீனாவின் பெய்ஜிங் பகுதியில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள அரை மாரத்தான் போட்டிக்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் மனிதர்களுடன் சேர்ந்து மனித வடிவ ரோபோக்களும் போட்டியிட உள்ளன. பாதுகாப்பு காரணங்களால் மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைப் போல தொழில்நுட்ப நிபுணர்கள் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தும் முறையல்லாமல், இந்த ஆண்டு ரோபோக்கள் முழுமையாக சுயமாக இயங்குகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற 21 கிலோமீட்டர் அரை மரத்தான் போட்டியில், பெய்ஜிங் ஹியூமானாய்டு ரோபோட் இனோவேஷன் சென்டர் உருவாக்கிய ‘டியாங்கோங் அல்ட்ரா’ ரோபோ 2 மணி 40 நிமிடம் 42 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பெற்றது.


Smacy News 1 month ago
Home Flash News