Select Location
All Locations
State
Region
City / District
நடிகர் சூர்யாவைத் தாக்கிய சிவகார்த்திகேயன்?

நடிகர் சூர்யாவைத் தாக்கிய சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்துப் பதிவு ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூரியின் மண்டாடி மற்றும் நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படங்கள் நேற்று (செப். 10) திரையரங்குகளில் வெளியானது. இதில், சர்தார் - 2 கலவையான விமர்சனங்களையும் மண்டாடி நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளன. இதனால், மண்டாடி திரைப்படத்திற்குத் திரைகள் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, நடிகர் சிவகார்த்திகேயன் எக்ஸ் தளத்தில் நடிகர் கார்த்தியை சாதாரணமாக வாழ்த்தினார். மேலும், நடிகர் சூரியின் திரைப்படத்தைக் குறிப்பிட்டு, ‘நல்ல படைப்புகள் பெரிய வெற்றியைப் பெறும்’ என வாழ்த்தினார்.

இதனைக் கண்ட ரசிகர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படத்திற்கு சூர்யா, தற்போது சிவகார்த்திகேயன் வாழ்த்தியது போல் சாதாரணமாக வாழ்த்திவிட்டு அவரின் தம்பியான கார்த்தியின் சர்தார் திரைப்படத்தை, ‘நல்ல படைப்புகள் பெரிய வெற்றியைப் பெறும்’ என வாழ்த்தினார். தற்போது, சிவகார்த்திகேயன் நடிகர் சூர்யாவைத் தாக்கும் விதமாக அதே வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது இருவரின் ரசிகர்களிடம் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், சிவகார்த்திகேயன் பயன்படுத்திய வாக்கியம் இயல்பாக எழுதப்பட்டதா இல்லை வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்டதா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.


Dinamani 1 hour ago
Home Flash News