முதல்வர் விஜய் பயணித்த விமானம் ஃபிளைட் ரேடாரில் முதலிடம்!
தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் பயணித்த துபை விமானத்தை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் டிராக் செய்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு சர்வதேச தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஜோசப் விஜய் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் நாட்டுக்கு நேற்றிரவு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு 10.05 மணிக்கு புறப்பட்ட எமிரட்ஸ் விமானத்தில் துபை சென்ற முதல்வர் விஜய், அங்கிருந்து லண்டனுக்குச் செல்கிறார். இந்த நிலையில், முதல்வர் விஜய் துபைக்குச் சென்ற எமிரட்ஸின் யுஏஇ547 விமானத்தை, ஃபிளைட் ரேடார் தளத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் டிராக் செய்துள்ளனர். இதனால், அந்த விமானம் உலகளவில் அதிகளவில் டிராக் செய்யப்பட்ட விமானத்தில் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இதற்கு முன்னதாக, தேர்தல் பிரசாரங்களின் போது முதல்வர் விஜய் பயணித்த தனி விமானத்தையும் ஃபிளைட் ரேடார் தளத்தில் அதிகளவிலானோர் டிராக் செய்திருந்தனர். செப்டம்பர் 16 வரை லண்டனில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளார்.