Select Location
All Locations
State
Region
City / District
“போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் ஆகிறதோ?” - மு.க.ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!

“போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் ஆகிறதோ?” - மு.க.ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தார். அப்போது அவர், கடந்த கால திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களைக் குறிப்பிட்டுத் திமுகவினர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இதில் முதல்வர் விஜய் மிசா குறித்து பேசும் போது, திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினைச் சைகை மூலம் உருவக் கேலி செய்யும் விதமாகப் உடல்மொழி செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் விஜய்க்கு பதிலளிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் இன்று காலை வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், மிசா காலத்தில் தனக்கு நடந்த அடக்குமுறைகளைப் பற்றி பேசிய அவர், சர்க்காரியா கமிஷன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்தார்.

மேலும், முதல்வர் பதவியில் இருக்கும் விஜய் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்றும், சட்டமன்ற மாண்பை குலைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும், ஆட்சி நிர்வாகத்தை சினிமா சூட்டிங் மாதிரி நடத்துவதாகவும் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்த நிலையில், மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு தவெக கட்சி பதிலடி கொடுத்துள்ளது. தவெக ஐடி விங் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட சிறை சென்ற தியாகி என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ? எதை உலகறியக் கூடாது என்று மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி மகன் வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் detention copy (தடுப்புக்காவல் சான்றிதழ்) பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை.

உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே ஷூட்டிங் வீடியோ வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது. பல கட்-கள், உணர்வற்ற பேச்சு, மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே தெரிகின்றன. கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப்பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் காணொளி” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Nakkeeran 14 hours ago
Home Flash News