நாதக: 'இடைத்தேர்தலில் கண்டிப்பா போட்டியிடணுமா?' - தயக்கத்தில் தம்பிகள்.. சீமான் முடிவென்ன?
த.வெ.க-வை சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறார்கள் நா.த.க-வின் பிரபல நிர்வாகிகள். இச்சூழலில் களத்தில் தவெகவை எதிர்க்கவும் வீழ்த்தவும் சரியாக வியூகத்துடன் செல்ல வேண்டும்.. இல்லையென்றால் புறக்கணித்துவிட வேண்டும்! - நா.த.க சீனியர்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 'நாம் கண்டிப்பாக போட்டியிட வேண்டுமா..' என்ற கேள்விகள் நா.த.க சீனியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிர்வாகிகளின் விருப்பத்துக்கு மாறாக 'கண்டிப்பாக போட்டியிட வேண்டும்' என்ற மூடில் இருக்கிறாராம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்!