Select Location
All Locations
State
Region
City / District
பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் ‘மூன் வாக்’ தீபாவளிக்கு ரிலீஸ்

பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் ‘மூன் வாக்’ தீபாவளிக்கு ரிலீஸ்

பிரபு தேவா - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘மூன் வாக்’ படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிஹைண்ட்​வுட்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு தேவா நடித்திருக்கும் நகைச்சுவைப் படம் ‘மூன் வாக்’. இந்தப் படத்தில் அவருடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் – பிரபு தேவா கூட்டணியில் 90-களில் வெளியான ‘காதலன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’ படங்களும் அதன் பாடல்களும் ஹிட் அடித்திருந்தன. இந்தக் கூட்டணி கடைசியாக 1997-ம் ஆண்டில் வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக் கூட்டணி ‘மூன் வாக்’ படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறது.

மூன் வாக் படத்துக்கு இசை அமைத்து இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தில் அனைத்துப் பாடல்களையும் அவரே பாடியுள்ளார். அத்துடன் படத்தில் ஒரு காட்சியிலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் யோகி பாபு, தான் 16 கெட்-அப்களில் நடித்திருப்பதாக பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் தெரிவித்துருந்தார்.

நீண்ட காலம் தயாரிப்பில் இருந்த இந்தப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து பிஹைண்ட் வுட்ஸ் அதன் எக்ஸ் வலைதள பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளது. அதில், ‘மூன் வாக் படத்தின் மூலம் இந்த தீபாவளி சிரிப்பால் நிறையட்டும் குடும்ப நகைச்சுவைப் படமான ‘மூன் வாக்’ இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகிறது.உங்கள் குடும்பத்தின் இந்தாண்டு தீபாவளி மகிழ்ச்சியால் நிறையட்டும்’ என்று தெரிவித்துள்ளது.


Hindu Tamil 52 minutes ago
Home Flash News