Select Location
All Locations
State
Region
City / District
விஜய் தேவரகொண்டாவின் ரணபலி வெளியீட்டுத் தேதி!

விஜய் தேவரகொண்டாவின் ரணபலி வெளியீட்டுத் தேதி!

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த அவரது 14வது திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா புதிய திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணியில் தயாராகிவரும் இப்படத்தில் நாயகியாக ரஷ்மிகா நடித்துள்ளார்.

ரணபலி எனப் பெயரிட்டுள்ள இப்படத்தின் கிளிம்ஸ் விடியோ மற்றும் போஸ்டர்கள் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது. இந்த நிலையில், இப்படம் வருகிற அக். 16 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கடந்த சில திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றது குறிப்பிடத்தக்கது.


Dinakaran 3 days ago
Home Flash News