1 ரூபாய்க்குத் திருமண மண்டபம்; அரசின் அதிரடி திட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.1 வாடகைக் கட்டணத்தில் ஒரு சிறப்பான மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம், வருகின்ற செப்டம்பர் 16 அன்று திறக்கப்பட உள்ளது.
தற்காலத்தில் திருமண செலவுகள் என்பது ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. அதன் காரணமாக, பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள மக்களின் திருமணச் செலவுகளுக்கான சுமையைக் குறைக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ளது.
நல்லூர் மாநகராட்சி சார்பாக, 2 ஏக்கர் பரப்பளவில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் மிகப் பிரமாண்டமான முறையில் இந்த திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ரூ.1.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபத்தில் ஏசி அறைகள், சுத்தமான குடிநீர் மற்றும் வாகனங்களை நிறுத்தும் இடம் என அனைத்து வகையான வசதிகளும் உள்ளன. இத்தகைய வசதிகளைக் கொண்ட நவீன மண்டபத்தின் ஒரு நாள் வாடகை (24 மணி நேரம்) ரூ.1 மட்டுமே ஆகும். இந்த திருமண மண்டபத்தை வருகின்ற செப்டம்பர் 16 அன்று அமைச்சர் நாராயணா திறந்து வைக்கிறார்.