Select Location
All Locations
State
Region
City / District
மொழி என்பது தடையல்ல” - பிரியா பவானி சங்கர் நம்பிக்கை!

மொழி என்பது தடையல்ல” - பிரியா பவானி சங்கர் நம்பிக்கை!

இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘இருமுடி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 21 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் ‘இருமுடி கட்டு’ என்ற தலைப்பில் வெளியானது. இதனிடையே படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய பிரியா பவானி சங்கர், “படத்தின் கதை கேட்ட போது அதில் மிகப்பெரிய நம்பிக்கை வந்தது. இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் உள்ளே வந்த போது படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் என்பது உறுதியானது. மிகப்பெரிய கதாநாயகனின் படம் என்ற போதிலும் படப்பிடிப்பின் போது எந்த விதமான மாற்றமும் செய்யாமல் சொன்ன கதையை அப்படியே இயக்குநர் சிவா எடுத்துள்ளார்.

இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கம் என்பது பெருமையாக உள்ளது. ரவி தேஜா சாருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். வேறு மொழியில் இருந்து வந்த படம் என்று தமிழ் ரசிகர்கள் நிச்சயம் இதை நினைக்க மாட்டார்கள். மொழி என்பது தடையல்ல! அப்பா- மகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் இந்த படம் வெற்றி பெறும்” என்றார்.


Nakkeeran 13 hours ago
Home Flash News