Select Location
All Locations
State
Region
City / District
Udhayanidhi: ``தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்" - உதயநிதி

Udhayanidhi: ``தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்" - உதயநிதி

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றினார். அப்போது, ``கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நான் நான்கு முறை தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்துள்ளேன். அப்படியும் அரசு என்னைக் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்து வந்துவிட்டது.

தமிழ்நாட்டில் எங்கு பேசினாலும் பரவாயில்லை, தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும். நாம் பேசுகிறோமோ இல்லையோ, கீழே இருப்பவர்கள் பேசிக் கூட மாட்டிவிட்டு விடுவார்கள். ஆனால், இந்தக் கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் பயப்படும் ஆள் நான் கிடையாது.

விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த அந்தப் போராட்டத்தில் 22 நிமிடங்கள் உரையாற்றினேன். அதில், காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னவுடன் கோபம் வந்துவிட்டது. இந்த டெல்டா மண்டலம் என்றுமே திராவிடக் கோட்டை என்பதை நாம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளோம்.

டெல்டா மாவட்டங்களில் உள்ள சுமார் 30 தொகுதிகளில் வெறும் 4 தொகுதிகளில் மட்டும்தான் இன்றைய ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் புதிய அரசு அமைந்து கடந்த 105 நாட்களில் இந்த அரசால் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாய மக்கள்தான்.


Nakkeeran 14 hours ago
Home Flash News