Select Location
All Locations
State
Region
City / District
ரிஷப் பண்ட் உலக சாதனை: டெஸ்ட்டில் அதி விரைவில் 100 சிக்சர்கள்!

ரிஷப் பண்ட் உலக சாதனை: டெஸ்ட்டில் அதி விரைவில் 100 சிக்சர்கள்!

கால்லே டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று இந்திய அணியின் அதிரடி பேட்டரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவிரைவில் 100 சிக்சர்களை விளாசி உலக சாதனை புரிந்துள்ளார். 89 இன்னிங்ஸ்களில் 100 சிக்சர்களை விளாசிய ரிஷப் பண்ட் டெஸ்ட்டில் அதிவிரைவு 100 சிக்சர்கள் உலக சாதனை என்பது இந்த வடிவத்தின் வரலாற்றில் இவ்வளவு விரைவாக வேறு யாரும் எட்டியதில்லை. 

ஏனென்றால், இது போன்ற ஷாட்களை ஆடுபவர் ஒரே நபர் அவர்தான். லாஹிரு குமாரா வீசியது உள்நோக்கி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே, சற்று பேக் ஆஃப் லெந்த்தில் வீசப்பட்ட பந்து. அதை ரிஷப் பண்ட் ஆஃப் சைடில் சாய்ந்து, தன் கால்களை நகர்த்தாமல், வெறுமனே குனிந்து, பின்னர் அதைத் தனது வலது தோள்பட்டைக்கு மேல் தட்டிவிடுகிறார். டீப் ஃபைன் லெக் திசையில் பந்து சிறிது நேரம் ஆட்டத்தில் இருந்தது, பின்னர் பவுண்டரிக்கு வெளியே காணாமல் போனது, இதுதான் 100வது சிக்ஸ்!! இதுவே இந்த இன்னிங்சில் அவரது அரைசதம் நிறைவு செய்யும் ஷாட் ஆகவும் இருந்தது.


Hindu Tamil 13 days ago
Home Flash News