அரசுக்கு எதிராகப் போராட வெளிநாட்டு நிதி வருகிறதா? சிஜேபி அபிஜீத் தீப்கே பதில்
ஆளும் பாஜக அரசுக்கு எதிராகப் போராட வெளிநாட்டில் இருந்து நிதி வருகிறதா? என்ற கேள்விக்கு அபிஜீத் தீப்கே அளித்த பதில் குறித்து. ஆளும் பாஜக அரசுக்கு எதிராகப் போராட வெளிநாட்டில் இருந்து நிதி வருகிறதா? என்ற கேள்விக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே பதில் அளித்துள்ளார்.
எனக்கு வெளிநாட்டில் இருந்து நிதி கிடைக்கிறது என்றால், அது அமித் ஷா போன்ற ஒருவரின் தோல்வியின் பிரதிபலிப்பாகவே நான் கருதுகிறேன். அமித் ஷா பதவி விலக வேண்டும். ஒரு நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றொருவரால் இயக்கப்படுகிறார் என்றால், அது என்ன மாதிரியான சாணக்கியத்தனம்? ஜூலை 20 ஆம் தேதி மாணவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்த உத்தரவிட்டது அமித் ஷாதான், வேறு யாரும் இல்லை.
எங்கள் போராட்டத்திற்கு விவசாய சங்கத்தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். விவசாயிகள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றே விவசாயிகளும் நினைப்பார்கள். அதனால் எங்களுடன் போராட்டக் களத்தில் நின்றனர். அவர்களுக்குநாங்களும் ஆதரவாக நிற்போம். நானும் விவசயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். போராட்டத்தில் ஈடுபட்ட பலர் இளைஞர்களும் விவசாய குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர்கள்தான் எனக் குறிப்பிட்டார்.