வரலாற்று டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய வீராங்கனை விலகல்!
இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய வீராங்கனை பிரதீகா ராவல் விலகியுள்ளார். இங்கிலாந்தின் லார்ட் திடலில் முதல் முறையாக மகளிர் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. நாளை (ஜூலை 10) முதல் தொடங்கவுள்ள இந்தப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய வீராங்கனை பிரதீகா ராவல் விலகியுள்ளார்.
காயம் காரணமாக விலகியுள்ள பிரதீகா ராவலுக்குப் பதிலாக அணியில் மாற்று வீராங்கனையாக பிரியா புனியா சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக் கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஸ்ரீ சரணி, யாஷ்திகா பாட்டியா, நந்தினி சர்மா, ஹர்லீன் தியோல், ரேணுகா தாக்குர், கிராந்தி கௌட், சயாலி சத்கரே, ஸ்நே ராணா, பிரியா புனியா.