Select Location
All Locations
State
Region
City / District
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெற புதிய கெடுபிடி

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெற புதிய கெடுபிடி

புதுடெல்லி: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கான விதிமுறைகளை ஒன்றிய அரசு திருத்தியமைத்துள்ளது. இதன்படி, 2026ம் ஆண்டிற்கு முன்னதாகப் பதிவு செய்த அனைத்துச் சங்கங்களும், தாங்கள் எந்தெந்த மாநிலங்களில் செயல்படுகிறோம் மற்றும் நிதியின் நோக்கம் என்ன என்பதை ஒரு ஆண்டிற்குள் ஒன்றிய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.

மதக் கல்வி மற்றும் கலாசாரப் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளின் போது ‘மதமாற்றம்’ செய்வதைத் தவிர்க்க வேண்டும். சமூக ஊடக கணக்கு விவரங்களையும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாட்டு நிதியைப் பெற்ற நிறுவனங்கள், அதன் பயன்பாடு குறித்து கள ஆய்வு செய்யத் தனிக்குழு அமைக்கப்படும். கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் வெளிநாட்டு நிதியை செலவு செய்த நிறுவனங்கள் மட்டுமே இந்தப் பதிவைப் புதுப்பிக்க முடியும்.


Dinakaran 2 hours ago
Home Flash News