Select Location
All Locations
State
Region
City / District
முதல்வர் விஜய் பிறந்தநாள்: ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்

முதல்வர் விஜய் பிறந்தநாள்: ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்

முதல்வரின் பிறந்தநாளையொட்டி, ஜூன் 21, 22 இரு தேதிகளில் 3 உயிரியல் பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் இல்லை என அமைச்சர் ரஞ்சித் குமார் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசியதாவது, "முதல்வர் ச. ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வண்டலூர், வேலூர் அமிர்தி, சேலம் குரும்பட்டி ஆகிய உயிரியல் பூங்காக்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் நுழைவுக் கட்டணம் இல்லாமல், வழக்கமான முறையில் இணைய வழியாக நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, ஜூன் 21, 22 ஆகிய இரு தேதிகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த இரு நாள்களுக்கான நுழைவுக் கட்டணத்தை தவெக சார்பாக வனத்துறை அமைச்சரான நானும் எனது சகோதர்களும் குடும்ப அறக்கட்டளையும் அரசுக்கு முழுமையாகச் செலுத்தி விடுவோம். இந்த இரு நாள்களுக்கான நுழைவுக் கட்டணச் செலவு கிட்டத்தட்ட ரூ. 70 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம்" என்று தெரிவித்தார்.


Smacy News 2 hours ago
Home Flash News