Select Location
All Locations
State
Region
City / District
சென்னையில் ரயில் நிலையங்கள் அருகே உள்ள 52 டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசுக்கு கடிதம்!!

சென்னையில் ரயில் நிலையங்கள் அருகே உள்ள 52 டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசுக்கு கடிதம்!!

சென்னை: சென்னை கோட்டத்தில் ரயில் நிலையங்கள் அருகே உள்ள 52 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை கடிதம் அனுப்பியுள்ளனர். பெரம்பூர், அரக்கோணம் ரயில் நிலையங்கள் அருகே தலா 3 கடைகளும், கொருக்குப்பேட்டையில் 2 கடைகள், வியாசர்பாடி, அம்பத்தூர், வேளச்சேரி, கிண்டி, தரமணி உள்ளிட்ட நிலையங்களில் தலா 1 கடை உள்ளது என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் புதிதாக தவெக ஆட்சி அமைந்தப் பின்னர் பள்ளி, கல்லூரிகள், கோயில் அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, மேலும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், சென்னை கோட்ட ரயில்வேயில் மது போதையில் தண்டவாளத்தை கடப்பதால் உயிரிழப்பு சம்பவம், ரயில்கள் மீது பாட்டில்களை கொண்டு வீசுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இவற்றை தவிர்க்க., ரயில் நிலையங்களை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு சென்னை கோட்டம் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் கடிதம் அனுப்பபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Dinakaran 1 hour ago
Home Flash News