ராகுல் சதாசிவன் - பிருத்விராஜ் படத்தின் பெயர் அறிவிப்பு!
ஹாரர் இயக்குநர் ராகுல் சதாசிவன் நடிகர் பிருத்விராஜை வைத்து இயக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. பூதகாலம், பிரம்மயுகம், டீயஸ் ஐரே படங்களை இயக்கி ரசிகர்களிடம் நல்ல ஹாரர் இயக்குநர் எனப் பெயரெடுத்த ராகுல் சதாசிவன் நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் மஞ்சு வாரியரை முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து புதிய ஹாரர் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் போஸ்டர் கவனம் பெற்றிருந்த நிலையில், இப்படத்திற்கு ஒடியன் எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
நீண்ட காலம் கழித்து பிருத்விராஜ் ஹாரர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, நடிகர் மோகன்லால் ஒடியன் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.