Select Location
All Locations
State
Region
City / District
விஜயின் முதல் கோரிக்கை வெற்றி… ரூ.7,500 கோடியை அள்ளிக்கொடுத்த மத்திய அரசு

விஜயின் முதல் கோரிக்கை வெற்றி… ரூ.7,500 கோடியை அள்ளிக்கொடுத்த மத்திய அரசு

முதல்வர் விஜயின் CMIUTM திட்டத்தின் மூலம், தமிழக நகரங்களின் குடிநீர், கழிவுநீர், சாலை, பூங்கா மற்றும் நதிகள் மறுசீரமைப்புக்கு முதல் கட்டமாக மத்திய அரசின் ரூ.7,500 கோடி நிதி ஒப்புதல் கிடைத்துள்ளது. மாநில முதல்வர் தலைவர் விஜய் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாட்டின் மூன்று முக்கிய நீர்வழிகளான கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றை மீட்டெடுக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் Urban Challenge Fund (UCF) திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ₹7,500 கோடி நிதி ஒப்புதல் கிடைத்துள்ளது. முதல்வர் அறிவித்த Chief Minister's Integrated Urban Transformation Mission (CMIUTM) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. recommended by

இதன்மூலம் 24×7 குடிநீர், 100% கழிவுநீர் இணைப்பு, சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் ஒருங்கிணைந்த அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, 2031க்குள் 5 கோடி மரக்கன்றுகள் நடுதல், பூங்காக்கள் மற்றும் ்திறந்தவெளி பொது இடங்கள் விரிவாக்கம், அனைத்டு உள்ளாட்சி அமைகப்புகளிலும் animal birth control மையங்கள் அமைக்கப்படும். பசுமை நகரங்கள், நவீன உள்கட்டமைப்பு என தமிழ்நாட்டின் நகர்ப்புற வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் தொடங்கும் என நம்பபடுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நரங்களில் நவீன பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளும் ஏற்படுத்த வழிவகை செய்யப்படவுள்ளது.


Smacy News 1 hour ago
Home Flash News