நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாதனை..!! கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார்
முன்னதாக, கடந்த மே 27ல் நடைபெற்ற 3வது சுற்றிலும் கார்ல்சனை தோற்கடித்திருந்தார்.இதன்மூலம், ஒரே செஸ் தொடரில் கார்ல்சனை இரு முறை தோற்கடித்து, 19 ஆண்டு கால சாதனையை சமன் செய்துள்ளார். கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற இதே நார்வே செஸ் தொடரிலும் பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்னதாக, 2007ம் ஆண்டு நடைபெற்ற லினாரெஸ் சர்வதேச செஸ் தொடரில் இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே கார்ல்சனை ஒரே தொடரில் இரண்டு முறை வீழ்த்தியிருந்தார்.
அடுத்த சுற்றில், நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷை அவர் எதிர்கொள்கிறார். இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மருடன் மோத உள்ளார்.