Select Location
All Locations
State
Region
City / District
மேற்கு வங்க அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் பதவியேற்பு…

மேற்கு வங்க அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் பதவியேற்பு…

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி மே.வங்கத்தின் முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றார். மேலும் திலிப் கோஷ், அக்னிமித்ரா பால். அஷோக் கீர்த்தனியா, நிசித் பிரமாணிக் மற்றும் சுதிராம் துது ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்த நிலையில் இன்று மேற்கு வங்க பாஜக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன் படி தீபக் பர்மன், அர்ஜுன் சிங் உள்ளிட்ட 35 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதன் மூலம் மேற்கு வங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அம்மாநில ஆளுநர் ஆர்.என். ரவி புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர், என்டிஏ கூட்டணியைச் சேர்ந்த பல மாநில முதல் அமைச்சர்கள் மற்றும் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


News 7 Tamil 1 hour ago
Home Flash News