Select Location
All Locations
State
Region
City / District
வணிக ரீதியாக பாலியல் சுரண்டலுக்காக 18 வயதுக்குட்பட்டோர் கடத்தப்பட்டால் போக்சோ சட்டம் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

வணிக ரீதியாக பாலியல் சுரண்டலுக்காக 18 வயதுக்குட்பட்டோர் கடத்தப்பட்டால் போக்சோ சட்டம் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வணி​க ரீ​தி​யாக பாலியல் சுரண்​டலுக்கு 18 வயதுக்குட்​பட்ட ஒரு​வர் கடத்​தப்​படும்​போது அதன் ​மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரலாம் என்று உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்​ளது.

பாலியல் தொழிலா​ளர்​கள் தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.பி.பர்​தி ​வாலா, ஆர்​.ம​கா தேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது இந்த மனுக்​களை விசா​ரித்து நீதிப​தி​கள் கூறிய​தாவது:

பய முறுத்​தல், பிற வகை​யான கட்​டாயப்​படுத்​துதல், ஆட்​ கடத்​தல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம், பாதிக்​கப்​படக்​கூடிய நிலை​யில் உள்ள ஒரு​வரின் நிலை​யைத் தவறாகப் பயன்​படுத்​துதல், ஒரு​வரின் சம்மதத்​தைப் பெறு​வதற்​காகப் பணம் அல்​லது சலுகைகளை வழங்​குதல்​, பெறு​தல் போன்ற பட்​டியலிடப்​பட்ட ‘வழி​முறை​களில்' ஏதேனும் ஒன்று பயன்​படுத்​தப்​பட்​டிருந்​தால், திட்​ட​மிடப்​பட்ட சுரண்​டலுக்கு ஒரு வயது வந்த பாதிக்​கப்​பட்​ட​வர் அளித்த சம்​மதம் பொருட்​படுத்​தத்​தக்​கதல்ல.

அதாவது, ஆட்​கடத்​தலுக்கு ஆளான ஒரு குழந்​தையோ அல்​லது பாதிக்​கப்​பட்​ட​வரின் சம்​மதத்​தையோ பொருட்​படுத்​தக்​கூ​டாது. வணிக ரீதி​யான பாலியல் சுரண்​டலுக்​காக குழந்​தைகளைக் கடத்தும் வழக்​கு​கள், பார​திய நியாய சன்​ஹிதா மற்​றும் ஒழுக்கக்கேடான கடத்​தல் தடுப்​புச் சட்​டம்' ஆகிய​வற்​றின் தொடர்புடைய பிரிவு​களு​டன் சேர்த்​து, கடுமை​யான போக்சோ சட்​டத்​தின் கீழும் வழக்​குப்​ப​திவு செய்ய முடி​யும்.

பாலியல் தொழிலா​ளர்​களின் கவலைகளைத் தணிக்​கும் வகை​யில், இந்த நீதி​மன்​றம் பல்​வேறு வழி​காட்​டு​தல்​களைப் பிறப்​பிக்​கிறது.

அதேவேளை​யில், குற்​றம் இழைத்​தவர்​கள் மீது வழக்​குத் தொடர்வதற்​கும், பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு மறு ​வாழ்வு அளிப்பதற்​கும் உரிய சட்​டக் கட்​டமைப்​பை​யும் தெளிவுபடுத்துகிறோம்.

அதாவது, ஆட்​கடத்​தலுக்கு ஆளான ஒரு குழந்​தையோ அல்​லது பாதிக்​கப்​பட்​ட​வரின் சம்​மதத்​தையோ பொருட்​படுத்​தக்​கூ​டாது. வணிக ரீதி​யான பாலியல் சுரண்​டலுக்​காக குழந்​தைகளைக் கடத்தும் வழக்​கு​கள், பார​திய நியாய சன்​ஹிதா மற்​றும் ஒழுக்கக்கேடான கடத்​தல் தடுப்​புச் சட்​டம்' ஆகிய​வற்​றின் தொடர்புடைய பிரிவு​களு​டன் சேர்த்​து, கடுமை​யான போக்சோ சட்​டத்​தின் கீழும் வழக்​குப்​ப​திவு செய்ய முடி​யும். பாலியல் தொழிலா​ளர்​களின் கவலைகளைத் தணிக்​கும் வகை​யில், இந்த நீதி​மன்​றம் பல்​வேறு வழி​காட்​டு​தல்​களைப் பிறப்​பிக்​கிறது. அதேவேளை​யில், குற்​றம் இழைத்​தவர்​கள் மீது வழக்​குத் தொடர்வதற்​கும், பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு மறு ​வாழ்வு அளிப்பதற்​கும் உரிய சட்​டக் கட்​டமைப்​பை​யும் தெளிவுபடுத்துகிறோம்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News