மலேசியாவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கவும், பயன்படுத்தவும் தடை!!
கோலாலம்பூர்: இணைய பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் புதிய ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்தை மலேசிய அரசு கொண்டுவந்துள்ளது. அந்த வகையில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும் தங்களது பயனர்களின் வயதை முறைப்படி சரிபார்ப்பது கட்டாயம் எனவும், விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது அபராதம் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும் மலேசிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.