Select Location
All Locations
State
Region
City / District
மேற்கு வங்கம் முழுவதும் 100 திரிணமூல் கவுன்சிலர்கள் ராஜினாமா

மேற்கு வங்கம் முழுவதும் 100 திரிணமூல் கவுன்சிலர்கள் ராஜினாமா

கொல்கத்தா: மேற்​கு ​வங்​கத்​தில் நடைபெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்​சி​யைப் பிடித்தது. மேற்​கு​வங்​கத்​தின் தற்​போதைய முதல்​வர் சுவேந்து அதி​காரி, ஒரு காலத்​தில் திரிண​மூல் காங்​கிரஸின் மூத்த தலை​வ​ராக இருந்​தார். முந்​தைய காலத்​தில் அவரோடு தொடர்​பில் இருந்​தவர்​கள் பாஜகவில் இணைந்து வரு​கின்​றனர். இந்த சூழலில் மேற்​கு​வங்​கம் முழு​வதும் 100 திரிண​மூல் கவுன்​சிலர்​கள் தங்​கள் பதவியை ராஜினாமா செய்​துள்​ளனர்.

குறிப்​பாக பட்​பாரா நகராட்​சி​யில் ஒரே நேரத்​தில் 30 கவுன்சிலர்கள் ராஜி​னாமா கடிதத்தை அளித்​துள்​ளனர். ஹலிசஹர் நகராட்​சி​யில் 16, கஞ்​சர​பாரா 14, கருலியா நகராட்சியில் 18, நார்ட் பாரக்​பூர் நகராட்​சி​யில் 15, கொண்​டாய் நகராட்​சி​யில் 14 கவுன்​சிலர்​கள் பதவியை ராஜி​னாமா செய்திருக்கின்​றனர். இதுகுறித்து மேற்​கு​வங்க அரசி​யல் நோக்​கர்​கள் கூறும்​போது, “கடந்த கால திரிண​மூல் காங்​கிரஸ் ஆட்​சி​யின் ஊழல் விவகாரங்கள் குறித்து தற்​போது தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது பல்​வேறு உள்​ளாட்சி அமைப்​பு​களில் திரிண​மூல் கவுன்சிலர்​கள் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்டு வரு​கின்​றனர். அச்ச உணர்​வின் காரண​மாக ஒரே நேரத்​தில் 100 திரிண​மூல் கவுன்​சிலர்​கள் பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளனர்’’ என்று தெரி​வித்​தனர்.

அணி மாறும் திரிண​மூல்... முதல்​வர் சுவேந்து அதி​காரி தலை​மை​யில் கொல்​கத்​தா​வில் நேற்று உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் திரிண​மூல் காங்​கிரஸ் எம்பி காக்லி கோஷ் தஸ்​தி​தார் பங்கேற்றார். இவர் சில நாட்​களுக்கு முன்பு திரிண​மூலின் அனைத்து பொறுப்​பு​களில் இருந்​தும் வில​கி​னார். திரிண​மூல் காங்​கிரஸை சேர்ந்த அனிசூர் ரஹ்​மான் பிதேஷ், புர்கானுல் முகாதீன், வீணா மண்​டல், அப்​துல் மாதின் ஆகிய 4 எம்​எல்​ஏக்​கள் முதல்​வரின் ஆலோ​சனைக் கூட்​டத்​தில் பங்​கேற்​றனர். மேலும் சில திரிண​மூல் எம்​எல்​ஏக்​களும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்​திருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்ளன. மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மொத்​த​முள்ள 294 தொகு​தி​களில் பாஜக 208 இடங்​களை கைப்​பற்றி உள்​ளது.

திரிண​மூல் காங்​கிரஸுக்கு 80 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன. அந்த கட்சி எம்​எல்​ஏக்​கள் அணி மாறு​வ​தால் திரிண​மூலின் பலம் தொடர்ந்து குறைந்து வரு​கிறது. இந்த சூழலில் திரிண​மூல் காங்கிரஸ் தலை​வர் மம்தா பானர்ஜி கொல்​கத்​தா​வில் நேற்று கூறும்​போது, “இக்​கட்​டான காலத்தை கடந்து சென்று கொண்டிருக்​கிறோம். இந்த நேரத்​தில் கட்​சி​யினர் ஒற்​றுமை​யாக இருக்க வேண்​டும். விருப்​பம்​ இல்​லாதவர்​கள்​ கட்​சி​யில்​ இருந்​து தாராள​மாக வெளி​யேறலாம்​’’ என்​று தெரிவித்​தார்​.


Hindu Tamil 1 hour ago
Home Flash News