Select Location
All Locations
State
Region
City / District
மே 29 வரை நாடு முழுவதும் வெப்ப அலை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

மே 29 வரை நாடு முழுவதும் வெப்ப அலை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: நாடு முழுவதும் இன்னும் 5 நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. கோடை வெளியில் காரணமாக நாடு முழுவதுமே குறிப்பாக வடமாநிலங்களில் வெப்ப அலை மிகவும் கடுமையாக இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை இல்லாத வகையில் வடமாநிலங்களில் வெப்ப அலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெப்ப அலை காரணமாக தெலுங்கானாவில் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 51 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனிடையே கோடை வெப்பத்தின் தொடர்ச்சியாக மேலும் சில நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் கடும் வெப்ப அலை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 5 வட மாநிலங்களில் மிக கடுமையான வெப்ப அலை வரும் மே 29 வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. தமிழாக்கத்தை பொறுத்த வரை கடலோர மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.


Dinakaran 59 minutes ago
Home Flash News