Select Location
All Locations
State
Region
City / District
வெற்றிக்குப் பின் இருக்கும் பொறுப்பு: புதிய ஆட்சியாளர்களுக்கு சத்குருவின் அறிவுரை..!!

வெற்றிக்குப் பின் இருக்கும் பொறுப்பு: புதிய ஆட்சியாளர்களுக்கு சத்குருவின் அறிவுரை..!!

தமிழகம், கேரளம், மேற்குவங்கம் அசாம், புதுச்சேரி ஆகியவற்றிற்கான சட்டசபை தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இந்த நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் வெளியானது. மேற்குவங்கம், அசாம், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. தமிழகத்தில், த.வெ.க., 108 இடங்களை கைப்பற்றியுள்ளது.கேரளத்தில், காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ஜனநாயகத் திருவிழாவில் வெற்றி பெற்றவர்கள், தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மக்கள் மீது மிகுந்த பொறுப்புணர்வுடனும், அர்ப்பணிப்புடனும், இந்த வெற்றியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இது ஜனநாயகத்தின் இயல்பான நடைமுறை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சுயபரிசோதனை செய்து கொள்வதற்கும், ஆட்சி அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு மக்களுக்கு சேவை செய்வதற்கான வழிகளை கண்டறிவதற்கான நேரம். இந்த மாநில மக்களின் கனவுகளும் லட்சியங்களும் நிறைவேற வேண்டும். வாழ்த்துக்கள். வணக்கம். இவ்வாறு, சத்குரு பதிவிட்டுள்ளார்.


Smacy News 1 hour ago
Home Flash News