Tamil Nadu Election Results 2026 LIVE: தவெக வசம் 105+இடங்கள் - திமுக, அதிமுகவுக்கு அதிர்ச்சி
தவெக 13 தொகுதிகளில் வெற்றியும், 95 தொகுதிகளில் முன்னிலையும் பெற்றுள்ளது. திமுக கூட்டணிக்கு 71 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 54 தொகுதிகளும் மட்டுமே வசமாகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தவெக 109, திமுக கூட்டணி 71, அதிமுக கூட்டணி 54 தொகுதிகளை வசப்படுத்துகின்றன. அதிமுக, திமுக மாறி மாறி 2-ம் இடத்துக்கு போட்டாபோட்டி நிலவிய நிலையில் தற்போது திமுக 2-ம் இடத்தில் உள்ளது.
தமிழகம் முழுவதுமே மண்டலங்கள் கடந்து பரவலாக தவெக தொடர் முன்னிலையில் இருக்கிறது. தமிழகத்தில் 4 முனைப் போட்டி என்று சொல்லப்பட்ட நிலையில், நாதக களத்தில் மட்டுமே இருந்தது; மற்றபடி ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. காரைக்குடியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட நிலையில் அங்கே தவெக வேட்பாளர் டாக்டர் பிரபு வெற்றி பெற்றிருக்கிறார்.