தவெகவிற்கு முதல் வெற்றி- விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத் அபாரம்!
தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றார்.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத அளவில் முன்னிலை வகித்து வருவது அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.கூட்டணி ஆதரவு இல்லாமல் தனியாக களமிறங்கிய இந்த கட்சி, 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன
இந்நிலையில் தவெகவிற்கு முதல் வெற்றியாக தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றுள்ளார். இவர் எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் கீதா ஜீவனை தோற்கடித்தார். 10 சுற்றுகள் முடிவில் 15,971 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.