Select Location
All Locations
State
Region
City / District
முதலிடத்துக்கு முன்னேறினார் வைஷாலி

முதலிடத்துக்கு முன்னேறினார் வைஷாலி

கேண்டிடேட்ஸ் செஸ் 10-வது சுற்றுப் போட்டியில் நேற்று மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, உக்ரைன் வீராங்கனை அன்னா முசிச்சுக் உடனான போட்டியை டிரா செய்தார். கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகள் சைப்ரஸ் நாட்டின் பாபோஸ் நகரில் நடந்து வருகின்றன. இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனை, நடப்பு சாம்பியன்களுடன் மோதி, அடுத்த சாம்பியன் ஆகும் வாய்ப்பு பெறுவர்.

நேற்று நடந்த மகளிர் பிரிவு 10-வது சுற்றுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, உக்ரைன் வீராங்கனையான அன்னா முசிச்சுக் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய வைஷாலி சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி டிரா செய்தார். இதன்மூலம் நடப்பு சீசனில் வைஷாலி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ளன.


Malaimalar 21 days ago
Home Flash News