... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
தமிழ்நாட்டில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற அவகாசம் நிறைவு..!

தமிழ்நாட்டில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற அவகாசம் நிறைவு..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி கடந்த மார்ச் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. மார்ச் 30-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், ஏப்ரல் 6-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 7,599 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 7-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

இதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முக்கிய வேட்பாளர் மற்றும் அவரது மாற்று வேட்பாளர் ஆகிய இருவரின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால், தவெக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 233 ஆகக் குறைந்துள்ளது.

இந்நிலையில், வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் 2,467 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.இதைத் தொடர்ந்து இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. இன்று மாலையே சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கப்பட உள்ளது.

Source : Smacy News

1 hour ago

Home Flash News